புளி சாதம் :
தேவையான பொருட்கள் :
அரிசி 30 கிராம், மஞ்சள் தூள் தேவையான அளவு,புளி 150 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், எண்ணெய் 50 மில்லி, கடுகு கால் ஸ்பூன், மிளகாய் 4, பெருங்காயம் ஒரு கிராம், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு,வெந்தயம் அரை ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, எள்ளு ஐந்து கிராம், நல்லெண்ணெய் 50 மில்லி, வேர்க்கடலை 10, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள அளவு புலியை எடுத்துக்கொண்டு பாத்திரத்தில் தண்ணீர் கலக்கவும் அத்துடன் உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்ச நேரம் ஊற வைக்க வேண்டும் ஊற வைத்த பின் சிறிது கலர் மாறரும். அந்த தண்ணீரை நாம் சுத்தமாக பிரி த்துக் கொள்ள வேண்டும். இப்போது புளி கரைசல் தயாராகியுள்ளது. வானொலியில் பொன்னிறமாக வெங்காயத்தை வருத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வாணலில் எண்ணெயை ஊற்றி காய வைத்து கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை கலந்து வறுத்துக் கொள்ள வேண்டும்.மிளகாய் கருவேப்பிலை இரண்டையும் கிள்ளி போடவும். பொருள்களும் சிவந்து மஞ்சள் பொடி புலி கரைசலையும் இவை அனைத்தையும் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் போது கறிவேப்பிலை உருவி போடவும், கால் மணி நேரம் கிளறி விட வேண்டும். சாதத்தை வடிக்கும் போது ஒன்றுக்கொன்று சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் வடித உடன் தட்டில் கொட்ட வேண்டும். சாதம் மெதுவாக ஆரத்தொடங்கும். நல்லெண்ணெய் காய்ந்து வரும்போது கொத்தமல்லி எள்ளு மிளகாய் போன்றவற்றை சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும் இப்போது தனித்தனியாக புளிக்காய்ச்சல் குளிர்ந்த நிலையில் இருக்கிறது பாதம் இதமான சூட்டில் இருக்கிறது. நல்லெண்ணெய் மற்றும் எள்ளு மிளகாய் கொத்தமல்லி ஆகிய கலந்து கொதிநிலையில் இருக்கிறது இந்த மூன்றையும் சுத்தமான பாத்திரம் ஒன்றில் போட்டு நன்றாக கரண்டியின் துணைகொண்டு கலக்கி வைக்கவும். முடிந்தவரை கைப்படாமல் பார்த்துக் கொள்ளவும்.பொதுவாக புலிக்கு பல மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். உடலுக்கும் மிக சிறந்த புளிசாதம் தயார் நிலையில் உள்ளது.
தேங்காய் சாதம் :
தேவையான பொருட்கள் :
அரிசி 350 கிராம், தேங்காய் ஒன்று,கடலை பருப்பு மூணு ஸ்பூன்,உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன், வெங்காயம் சிறு துண்டு, உப்பு இரண்டு ஸ்பூன், நெய் நாலு ஸ்பூன், முந்திரி பருப்பு 20, நல்லெண்ணெய் மூன்று ஸ்பூன், மிளகாய் மூணு, பச்சை மிளகாய் 3,கருவேப்பிலை சிறிதளவு.
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள அரிசியை நல்ல பதத்தில் வடித்துக் கொள்ள வேண்டும். வடித்த சாப்பாட்டை ஆரம்பிக்க வேண்டும் பாத்திரத்தில் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு ஆகிய இரண்டையும் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ள வேண்டும், வானொலியில் மூன்று ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும். ஊற வைத்த கடலை பருப்பு உளுத்தம் பருப்பு இவை இரண்டையும் அதில் போடவும். அதில் கடுகு பச்சை மிளகாயை சேர்க்கவும். இவை அனைத்தையும் வருத்துக்கொண்டு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் நெய் முந்திரிப்பருப்பை வறுத்துக் கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பை முழுதாக போடாமல் கிள்ளி போடவும். மீதமுள்ள இரண்டு ஸ்பூன் நெய் பொடிப்பொடியாக காய வைத்து தேங்காய் துருவலை போட்டு வெண்ணிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும் துருவலுடன் கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக அகலத்தட்டில் ஆறும் சாதத்தினை எண்ணெயிலும் நெய்யிலையும் வறுத்தெடுத்த எல்லா பொருட்களையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும் அப்போது கலரும்போது சிறிதளவு நெய்யை உருக்கி சாதமானது உதிரி உதிரியாக மனம் மிகுந்ததாகவும் இருக்கும்.
தயிர் சாதம் :
தேவையான பொருட்கள் :
அரிசி 40 கிராம், கட்டி தயிர் 30 மில்லி, பச்சை மிளகாய் 4,பால் சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு ஒரு கை கரண்டி, எண்ணெய் 50 மில்லி, கருவேப்பிலை சிறிதளவு, கடுகு ஒரு ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, முந்திரி பருப்பு 10,உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன், மாங்காய் ஒரு சிறியது, இஞ்சி 1.
செய்முறை :
நொய் இல்லாத அரிசியை பார்த்து வாங்க வேண்டும். சாதத்தை சிறிது குழைய வைத்து வடிக்க வேண்டும், வ டித்த சாதத்தை பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்,பாலையின் தயிரையும் அதில் சேர்க்கவும் சிறிதளவு உப்பையும் சேர்க்கவும். மாங்காய், பச்சை மிளகாய், இஞ்சி இவைகளை அழகான முறையில் நறுக்கி தயிர்சாதத்தில் போடவும். தேவையான அளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லிகளை சேர்க்கலாம். வானலையில் 10 மில்லி எண்ணையை விடவும் நன்றாக காய விடுவோம் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் விரும்பினால் கடலைப்பருப்பு முந்திரி பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து கூட கடுகு பொன்னிறமாக வதக்க வேண்டும்.அப்படியே எடுத்து சாதத்தில் போட வேண்டும். பின்னர் கிளறி விடவும்,இப்போது தயிர் சாதம் தயார்.
எள்ளு சாதம் :
தேவையான பொருட்கள் :
பச்சரிசி 40 கிராம், நெய் 50 மில்லி,எள்ளு 100 கிராம், எண்ணெய் 100 மில்லி, உலர்ந்த மிளகாய் இரண்டு,உளுத்தம் பருப்பு ஒரு கரண்டி, கடுகு ஒரு தேக்கரண்டி,முந்திரிப் பருப்பு 50 கிராம், உப்பு தேவையான அளவு, கடலை பருப்பு 10 கிராம்.
செய்முறை :
பதமாக சாதத்தை வெடித்து தட்டில் வைத்துக் கொள்ளவும். வானிலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கொதி நிலைக்கு கொண்டு வரவும் அதில் எள்ளு மிளகாய் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். இவற்றை எடுத்து நல்லா பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள எண்ணையை மறுபடியும் ஊற்றி வானொலியில் கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முன்பே வடித்து எடுத்து வைத்துள்ள சாதத்தோடு எல்லாவற்றையும் தேவையான அளவு உப்பு கலந்து கிளறி விடுங்கள்.இப்போது எள்ளு சாதம் தயாராக உள்ளது.
காய்கறி சாதம் :
தேவையான பொருட்கள் :
கீரைத்தண்டு 1, கொத்வரங்காய் 6, பரங்கிக்காய் 3,கேரட் 1, பூசணிக்காய் 2, கத்திரிக்காய் 2, முட்டைகோஸ் 1, வெண்டைக்காய் 2, வெங்காயம் 2, உருளைக்கிழங்கு 2, அவரைக்காய் 4, பச்சரிசி 400 கிராம், பச்சை பட்டாணி 100 கிராம், புளி தேவையான அளவு, உப்பு இரண்டு தேய்க்க கரண்டி, உளுத்தம் பருப்பு 25 கிராம், நெய் 50 கிராம், துவரம் பருப்பு 25 கிராம்,நெய் 50 கிராம், துவரம் பருப்பு 25 கிராம், நல்லெண்ணெய் 150 மில்லி, கடுகு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, துருவிய தேங்காய் 50 கிராம், முந்திரிப் பருப்பு தேவையான அளவு.
செய்முறை :
சாதத்தை நன்றாக மல்லிகை போல் தனித்தனியாக இருக்கும்படி வடித்துக் கொள்ள வேண்டும். புளியையும் உப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஊற வைக்க வேண்டும்.அதனுடன் 100 மில்லி தண்ணீரை ஊற்றி லேசாக கிளற வேண்டும்.அந்த உப்பு கரைசலில் தண்ணீரை எடுத்து நன்றாக ஊறி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.இப்போது உப்பின் அளவு தெரிந்துவிடும் முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து உங்களுக்கு தேவையான அளவு சிறு துண்டுகளாக அறிந்து கொள்ள வேண்டும். இப்போது வானொலியில் கொஞ்சம் எண்ணையை விட்டு கொதி நிலைக்கு வந்ததும் கடலைப்பருப்பு கொத்தமல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு,மிளகாய் முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதற்கு முன்னாடி பச்சை பட்டாணியை ஒரு நாளைக்கு முன்னாடியே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை எல்லாம் நறுக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து இந்த காய்கறிகளை வேக வைக்க வேண்டும். புளி கரைசலை ஊற்றவும் பெருங்காயம் மற்றும் மசாலா பொடி ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்போது காய்கறிகள் வெந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.முதலில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பொன்நிறமாக வந்த பின் கடுகையும் போட வேண்டும். சிறிது சிறிதாக சாதத்தைக் கொட்டி கிளற வேண்டும் அப்போது எல்லாம் சாதத்தையும் போட்டு விட வேண்டும். இப்போது மீதம் உள்ள நல்லெண்ணெய் மற்றும் நெய்யை கூட ஊற்றவும் தயாராக வைத்துள்ள தேங்காயை துருவலை சாதத்திற்கு மேல் போடவும் கிளறி விட வேண்டும்.அந்த காய்கறி குழம்பை சாதத்தில் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும்,அத்துடன் எண்ணெய்,நெய்யையும் சாதத்தில் கலந்து சேர்த்து,கொதிநிலைக்கு வந்தவுடன் இறக்கி விட வேண்டும்.
பாரம்பரிய ரெசிபிக்கள்:
தேவையான பொருட்கள்:
முளைக்கிரை, மணதக்காளி கீரை
அரிசி 2 கப்
பொடியாகிய நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப் பட்டானி - அரை கப் பூண்டு - சிறிய பச்சை மிளகாய் -2 தேங்காய் துருவல், கட்டி பெருங்காயம், கடுகு, உளுத்தபருப்பு,கடலை பருப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - எண்ணை - தேவையான அளவு
அரைக்க :
மிளகாய் - 6
தனியா , தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஷியில் வைத்து அரைத்து கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணை விட்டு காய விடவும்,கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,பெருங்காயம் தாளிக்கவும்.பின்னர் பொடியாகிய வெங்காயம், தக்காளி,பூண்டு,மிளகாய் கீரை வகைகள் சேர்த்து வதக்கவும்.
Comments
Post a Comment