கீரை வகைகள் அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள்

                 அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள் தேவையான பொருட்கள்: மாங்காய் துண்டுகள் - அரை கப் அரைக்கீரை - ஒரு கப் வெல்லம் - ஒரு கப் பச்சை மிளகாய் - 1  கடுகு , உளந்தம்பருப்பு, எண்ணெய் - தேவையான அளவு   செய்முறை: அகலமான பாத்திரத்தில் கீரை எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர், மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் வேக வைத்து இறக்கி , மத்தால் கடையயும். வெல்லை கலந்து மறுபடியும் கொதிக்கவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணைய் விட்டு கடுகு, உளுத்தபருப்பு கொட்டி கலந்து பரிமாறவும்.  முளைக்கிரை வடை   முளைக்கிரை - ஒரு கப்  உளந்தம்பருப்பு - கால் கிலோ பச்சை மிளகாய் - 1  காய்ந்த மிளகாய் - 4 நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்  பெருங்காயத்தூள் , கறிப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு  இஞ்சி - சிறிய துண்டு  உப்பு , எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: உளந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் , நறுக்கிய    3. பின...

சைவக் குழம்பு வகைகள் :

 காய் குழம்பு :

தேவையான பொருட்கள்:

 பூசணிக்காய் 200 கிராம் 

எண்ணை 1டேபிள் ஸ்பூன்

 புளி எலுமிச்சம் பழம் அளவு

 மஞ்சள் 1 சிறு துண்டு

 உலர்ந்த மிளகாய் 6 

பெருங்காயம் 1 கிராம்.

 தனியா 1 டேபிள் ஸ்பூன்

 வெந்தயம் 1/2 ஸ்பூன் 

துவரம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

 கடுகு 1/4 ஸ்பூன் 

கடலைப்பருப்பு ஒரு மேசை கரண்டி 

கருவேப்பிலை கொஞ்சம் 

உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன் 

உப்பு தேவையான அளவு

செய்முறை:

 நாம் காய்கறிகளை சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். வேக வைக்கக்கூடிய  காய்களையும் நாம் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழைத்துக் கொள்ளவும்.துவரம் பருப்பு, தனியா, மிளகாய் இந்த மூன்றையும் எண்ணெய் விட்டு நன்றாக பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும். மஞ்சள் துண்டை அரைத்துக் கொள்ளவும். இப்போது குழம்பு  பாத்திரத்தை வைக்கவும்.அதில் எண்ணை விட்டு பெருங்காயம், வெந்தயம்,கடலைப்பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து கடுகு,கருவேப்பிலை எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டும். இப்போது புளி கரைசலை பாத்திரத்தில் போடவும். இப்போது நன்றாக கலக்க வேண்டும். குழம்பு நன்றாக கொதித்ததும் காய்கள் வெந்ததும் குழம்பு பாத்திரத்தை கீழே இறக்கி விட வேண்டும். இப்போது தயாராக உள்ளது குழம்பு.

***************************************

வத்த குழம்பு :

தேவையான பொருட்கள்: 

சுண்டைக்காய் வற்றல் 20 

பெருங்காயம் 1 துண்டு 

அரிசி மாவு 2 ஸ்பூன் 

எண்ணை 2 டேபிள்ஸ்பூன்

 புளி 50 கிராம் 

வெந்தயம் 1/2 ஸ்பூன் 

மிளகாய் 5

 உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

 தனியா 1 டேபிள் ஸ்பூன்

 துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

 கருவேப்பிலை 2

 கடுகு 1/2 டீஸ்பூன் 

உப்பு 3 ஸ்பூன்

செய்முறை:

 பாதி எண்ணை வாணலியில் ஊற்றி சுண்டக்காய் கருத்த நிறம் வரும் வரை வறுக்கவும். புளியும், உப்பையும் 1/2 லிட்டர் தண்ணீர் ஊத்தி நன்றாக ஊற வைத்து வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி எண்ணையை வாணலியில் இட்டு துவரம் பருப்பு,தனியா உளுத்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை நன்றாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது குழம்பு வைக்கும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். மீதி உள்ள எல்லா பொருட்களையும் அப்படியே கொட்டி நன்றாக கிளறவும். குழம்பு கொதித்ததும் சாப்பிடலாம். வற்றல் குழம்பில் மணத்தக்காளி வற்றலையும் பயன்படுத்தலாம்.

*************************************


Comments