சாதம் வகைகள் வெண்பொங்கள், சர்க்கரை பொங்கல், ரவை பொங்கல்,இனிப்பு பொங்கல், எலுமிச்சை சாதம்
வெண் பொங்கல் செய்யும் முறை :
தேவையான பொருட்கள் :
பச்சரிசி 250 கிராம்,இஞ்சி சிறிய துண்டு, பயித்தம் பருப்பு 75 கிராம், பெருங்காயம் ஒரு கிராம், நெய் 50 கிராம், சீரகம் அரை ஸ்பூன், முந்திரிப் பருப்பு 12, உலர்ந்த மிளகாய் தேவையான அளவு, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு சிறிதளவு.
செய்முறை :
பச்சரிசியில் கல் நெல்லு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பயித்தம் பருப்பை வாணலியில் சுத்தமாக சிவந்த நிறம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீரை வைத்து உலை வைக்க வேண்டும்,உலை கொதித்தவுடன் பயிற்றம்பருப்பை போடவும் இப்போது கால்வாசி நிலைக்கு கொதிநிலைக்கு வந்ததும் பச்சரிசி சிந்தாமல் சிதறாமல் எடுத்து உலையில் சிரித்து சிறிதாக போடவும்.மற்ற சாதனங்களை வெடிக்கும் போது சாதம் உதிரியாக இருக்க வேண்டும்,ஆனால் வெண் பொங்கல் பொறுத்தவரை சாதம் குழைத்து போக இருக்க வேண்டும். சாதம் குழைத்து பருவத்தை அடைந்ததும், இஞ்சியை துண்டாக வெட்டி சாதத்தின் மேலே போட வேண்டும். சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை பொடி செய்து சாதத்தின் மேலே போட வேண்டும்.இப்பொழுது வானொலியில் எண்ணெய் ஊற்றி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக கருவேப்பிலையும், எல்லாவற்றையும் போடவும் எல்லாம் சாதத்தில் ஊற்றி கலர வேண்டும். இப்பொது சுவையான வெண்பொங்கல் தயாராக உள்ளது.
சர்க்கரை பொங்கல்:
தேவையான பொருட்கள்:
நெய் 25 கிராம்
பச்சரிசி 1/4 லிட்டர்
பசும்பால் 50 மில்லி
கேசரி பவுடர் தேவையான அளவு ஏலக்காய் 4
பச்சைக் கற்பூரம் சிறிதளவு
வெள்ளம் 250 கிராம்
முந்திரிப் பருப்பு 25 கிராம்
பயிற்றம்பருப்பு 50 கிராம்
திராட்சை 25 கிராம்
செய்முறை:
கால் லிட்டர் அரிசியை நன்றாக கல் நீக்கி நொய் மாதிரி சுத்தம் படித்துக் கொள்ள வேண்டும்.இப்போது பொங்கல் பானையை அரை லிட்டர் தண்ணி ரோடு வைக்க வேண்டும். உலை நன்றாக கொதித்து வரும் போது பாலை சேர்க்க வேண்டும். இப்போது வறுத்து வைத்துள்ள பைத்தம் பருப்பை பானைக்குள் போடவும், ஏற்கனவே சுத்தம் படுத்தி வைத்திருக்கும் பச்சரிசியையும் சேர்க்கவும். பருப்பும் பச்சரிசியும் நன்றாக வெந்தவுடன் வெள்ளத்தை சேர்த்துக் கொள்ளவும். வெள்ளம் எல்லா இடத்திலும் படுமாறு கலக்கிக் கொள்ள வேண்டும். சாதம் இருக்கத் தொடங்கும் போது பானையை இறக்கி வைக்கவும், ஏலக்காயை நாம் சேர்த்துக் கொண்டால் மனதிற்கு நன்று அதனால நாம் ஏலக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும் கூடவே தேவைக்கேற்ப பச்சை கற்பூரத்தையும், கேசரி பவுடரையும் பொங்களில் சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது வானிலையில் நெய்யை ஊற்றி முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்களை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இப்போது பொங்கலில் கொட்டி கிளறி விடவும் புது சர்க்கரை பொங்கல் சாப்பிட தயாராக உள்ளது.
ரவை பொங்கல் :
தேவையான பொருட்கள் :
ரவை அரை லிட்டர்
நெய் 25 கிராம்
இஞ்சி ஒரு சிறு துண்டு
பயிட்ரம் பருப்பு 75 கிராம்
முந்திரிப் பருப்பு 10
சீரகம் அரை டீஸ்பூன்
மிளகு அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியில் தனித்தனியே பயித்தம் பருப்பையும் ரவையையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பயிற்றம்பருப்பை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது வாணலியில் நெய்யை ஊற்றி காய வைக்கவும்.நன்றாக காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றை கிள்ளி போடவும். சீரகத்தை மற்றும் அம்மியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். மிளகை பாதியாக உடைத்து கருகாத மாதிரி சேர்த்து கிளறுங்கள். இப்போது இந்த பொருட்கள் வானிலையில் வறுக்கபட்டு கொண்டிருக்கும்போதே தண்ணீரை மெதுவாக ஊற்றவும், போதுமான அளவு தண்ணீரை ஊற்றிய பின் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். புதூர் ரவையை கொட்டவும்.இப்போது ரவை நன்றாக வெந்து வரும்போது பயிற்றம்பருப்பை கொட்டி நன்றாக கிளறி விடுங்கள்.
இனிப்பு பொங்கல் :
தேவையான பொருட்கள்
அரிசி ம1/4 லிட்டர்
ஏலக்காய் 4
தேங்காய் 1
முந்திரிப் பருப்பு 12
வெள்ளம் 350 கிராம்
நெய் 50 கிராம்
பச்சைக் கற்பூரம் சிறிதளவு
செய்முறை:
சாதத்தை கவனமாக வடித்துக் கொள்ளுங்கள் சோற்றுப் பரு கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.இதே போன்ற சமையலுக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும். இப்படி நல்ல தகுந்த சாப்பாட்டை பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முழு தேங்காய் தேவைப்படுகிறது.சிறிய தேங்காய் ஒன்று தேவைப்படும். அப்படி இல்லை என்றால் பெரிய தேங்காய் பாதி அளவு இருந்தால் போதும்.தேவையான அளவு தண்ணீரை ஊற்றி பாத்திரத்தில் உடன் கலந்து தேங்காயையும் கொட்டி காய்ச்சவும் இவை சலவையான பாகுப வடிவத்தில் உருவாகும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். உடன் ஏலகாயையும், பச்சைக் கற்பூரத்தையும், இனிப்பு கலவையில் போட்டு நன்றாக கலக்கி விடவும்.இப்போது வாண லியை நெய்யை ஊற்றி காய விடுங்கள்.முந்திரி பருப்பை போடுங்கள்,முந்திரிப்பருப்பு பொன்னிறமாக மாறி வந்ததும் அப்படியே சாதத்தில் கொட்டி கிளருங்கள் இப்போது இளம் சூடாக இருக்கும் இனிப்பு கலவைகளையும் சாதத்தில் ஊற்றி கலரவும், இப்போது இனிப்பு சாதம் தயார். கிராமங்களில் அதிகமாக பயன்படுத்தக் கூடிய ஒரு சாதமாகும்.அதுவும் விசேஷ நாட்களில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இல்லையென்றால் அவற்றுக்கு பதிலாக எண்ணையையும் பயன்படுத்துங்கள். பருப்புக்கு பதிலாக நிலக்கடலைப் பருப்பு. எதுவும் பயன்படுத்தலாம். சுவையான இனிப்பு சாதம் தயாராக உள்ளது.
எலுமிச்சை சாதம் :
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு 20 கிராம்
பச்சரிசி 40 கிராம்
எண்ணெய் 50 கிராம்
எலுமிச்சம் பழம் 5
கருவேப்பிலை 1 கட்டு
கொத்தமல்லி 1 கொத்து
பச்சை மிளகாய் 15 கிராம்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு 100 கிராம்
பெருங்காயம் 2 கிராம்
உப்பு தேவையான அளவு
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
உலர்ந்த மிளகாய் 5
செய்முறை:
வழக்கம்போல சாதம் வடிக்கும் போது ஒன்றோடு ஒன்று சேராமல் மல்லி பூவை போல் வடித்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். இப்போது வாண லியில் 50 கிராம் எண்ணெய் ஊற்றி காய விடவும். இப்போது எண்ணெய் காய்ந்ததும் மிளகாய் உடைத்து போடவும். கூடவே கடலை, பருப்பு உளுத்தம் பருப்பு பெருங்காயம், முந்திரிப்பருப்பு இவவைகளை போட்டு லேசாக சிவக்கும் படி வைக்கவும். கடைசியாக கடுகையும் தூவி பொரிந்ததும் கருவேப்பிலை, கொத்தமல்லி தழையை போட்டு, கீழே இறக்கி வைக்கவும். எலுமிச்சை பழங்களை நன்றாக அறுத்து முழுவதுமாக பிசைந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் இருக்கும் சாதத்தில் மஞ்சள் பொடியை கொட்டி கிளறவும். எலுமிச்சை பழச்சாறு உப்பு மற்றும் வறுத்து வைத்த சூடான பொருட்களை எண்ணெயோடு கலந்து. சாதத்தில் கொட்டி கிளறவும்.எலுமிச்சை பழ சாதம் தயாராக உள்ளது.
பச்சரிசி சாதம் :
அரை கிலோ பச்சரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணி தண்ணீர் தேவைப்படுகிறது. எப்போதும் கிராமத்துப் பெண்கள் பொதுவாக ஒரு கணக்கை வைத்திருப்பார்கள். அதாவது ஒரு பாகம் அரிசி என்றால் மூன்று பாகம் தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்போது தண்ணீரை கொதித்ததும் அரிசியை நன்றாக கழுவி கல்லு நெல்லு இல்லாதவாறு சுத்தமாக உலயில் கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.இப்போது அரிசியை போட்டவுடன் கிளரி விட்டு தட்டை மேலே மூடவும். அப்படி நாம் மூடாமல் விட்டால் தூசு போன்றவைகள் ஒட்ட நேரிடும். நுழைவாயை மூடும்போது ஓட்டைகள் இல்லாத தட்டை பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்தினால் நீராவி போக வழி இல்லாமல் ஆகிவிடும். சாதம் மல்லிகை பூ போல மெதுவாக அழுத்தியதும் அம்முக்கும் பதத்திற்கு வந்தவுடன் சாதத்தை வடிக்கவு.ம் பச்சரி சதாம் தயாரிக்கும் முறைப்படியே புழுங்கல் அரிசியும் வடிக்க வேண்டும். அதனால்தான் புழுங்கல் அரிசி போன்றே வெடிப்பார்கள்.
கட்டு சாதம் :
தேவையான பொருட்கள்:
புளி 150 கிராம்
அரிசி 300 கிராம் நல்லெண்ணெய் 50 மில்லி கடுகு 1/2 ஸ்பூன்
பெருங்காயம் 1 கிராம்
வெந்தயம் 1/2 ஷ்பூன்
உலர்ந்த மிளகாய் 4 கருவேப்பிலை ஒரு கட்டு
மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு தேவையான அளவு
செய்முறை:
புளியையும், உப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஊற வைக்க வேண்டும். தண்ணீரையும் சேர்க்கவும், புளி க்கரசலில் சக்கைகள் இல்லாதவாறு சூடு படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வாணலியை எண்ணெய் ஊற்றி பெருங்காயம், வெந்தயம், உலர்ந்த மிளகாய், ஆகியவை பொன்னிறமாக வறுத்து அதனோடு கருவேப்பிலையை கடுகையும் போட்டு உடனே இறக்கி விட வேண்டும். உரலில் வைத்து கொடியாக்க வேண்டும். இப்போது இரண்டையுமே தயாரிக்கும் போது, அதே வேலையில் சாதத்தையும் தயார் செய்து வைக்க வேண்டும். இப்போது சாதத்தில் மஞ்சள் தூள், புளி கரைசலை ஊற்றி வாணலியில் எடுத்து பொடியாக்கி வைத்துள்ள அனைத்தையும் கிளறி விட வேண்டும். துணியில் சாதத்தை கொட்டி நன்றாக மூட்டை போல இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.துணியில் சாதத்தைக் கொட்டி மூட்டை கட்டுவதற்கு முன்னதாக துணியில் தண்ணீரை தெளித்து துணியை ஈரமாக வைத்துக் கொள்வது நல்லதாகும்.பழைய முன்னோர்கள் வெளியூருக்கு செல்லும் போது இத்தகைய சா தங்களை தான் பயன்படுத்துகிறார்கள். புளி பசியை தூண்டும் சக்தி இருக்கிறது. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. இன்னும் பல சிறப்புகள் நிறைந்த கட்டு சாதத்தை நம் முன்னோர்கள் உண்டு பல நாட்களாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தயாரிக்கும், கட்டுசோர் ஆனது எப்போதும் கைப்படாத நிலையில் இருப்பதால் நாட்கள் கூட கெடாமல் இருக்கும்.
Comments
Post a Comment